உள்ளூர் செய்திகள்

ரோபோடிக்ஸ் போட்டியில் ஜொலித்த மாணவர்கள்

கோவை: புரூக் பீல்ட்ஸ், வணிக வளாகத்தில் உள்ள பங்கட் அரங்கில், ரோபோ சக்ராஸ் சர்வ வித்யா பெஸ்ட் என்ற, தேசிய அளவிலான ரோபோ அறிவியல் போட்டி நடந்தது.மூன்றாவது எடிசனாக நடந்த இந்த போட்டியில், இந்திய விண்வெளி மையத்தின் பவர் சிஸ்ட குழுவின் முன்னாள் இயக்குனர் ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டார். ரோபோடிக் சவால்கள், வினாடி-வினா, கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.ரோபோடிக் தொடக்க நிலை பிரிவில் அனன் கிட்ஸ் பள்ளி, ஜூனியர் பிரிவில் பி.வி.பி.,பள்ளி மற்றும் ரோபோ கோல்பில் வித்யா நிகேதன் பள்ளிகள் வெற்றி பெற்றன. அறிவியல் கண்காட்சியில், ஜூனியர் பிரிவில் இந்துஸ்தான் சர்வதேச பள்ளி, சீனியர் பிரிவில் மாநகராட்சி அம்மணியம்மாள பள்ளி, வினாடி -வினா போட்டியில், பி.எஸ்.பி.பி., பள்ளி ஆகியன முதலிடம் பிடித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்