பள்ளி, கல்லுாரிக்கு இன்றும் விடுமுறை
சென்னை: சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் முழுவதிலும்; காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சில இடங்களிலும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளுக்கும், இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.புயல், வெள்ளம் பாதித்த சில பகுதிகளில், நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் முழுதும் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதுார் மற்றும் குன்றத்துார் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கலைச்செல்வி அறிவித்துள்ளார்.செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய ஆறு தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு, இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ராகுல்நாத் அறிவித்துள்ளார்.