பயிற்சி விபரம் அனுப்ப உத்தரவு
சென்னை: கொரோனா காலத்தில், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை; இறுதியாண்டு மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப் அனைத்தும் பாதிக்கப்பட்டன.இதனால், எம்.பி.பி.எஸ்., சேர்ந்தவர்கள், இடர்பாடின்றி முதுநிலை படிப்புகளில் சேர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, 2018ல் எம்.பி.பி.எஸ்., சேர்ந்தவர்களின் பயிற்சி விபரங்களை, ஆணைய இணையம் வழியே, பல்கலைகள் அனுப்ப வேண்டும். அதன் அடிப்படையில், இந்தாண்டு முதுநிலை நீட் தேர்வை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.