விஜயகாந்த் படித்த பள்ளியில் அஞ்சலி
மதுரை: மதுரைக்கல்லுாரி வாரியத்திற்கு உட்பட்ட எம்.சி., மேல்நிலைப்பள்ளியில் படித்தவர் நடிகர் விஜயகாந்த். நேற்று முன் தினம் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு பள்ளிக் குழுத் தலைவர் சங்கரன், செயலாளர் பார்த்த சாரதி இரங்கல் தெரிவித்திருந்தனர்.பள்ளியில் தலைமையாசிரியர் ரவி தலைமையில் விஜயகாந்த் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அய்யனார், மகேஸ்வரன், வெங்கடேஷ், சீனிவாசன், வேலவன், ராஜா உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.