ஊட்டச்சத்து குறைபாடு கண்டறிய அட்வைஸ்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்திலுள்ள அங்கன்வாடி மைய மேற்பார்வையாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஸ்டெல்லா தலைமைவகித்தார். அங்கன்வாடி மையங்களில் செயல்பாடுகள், குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை கண்காணிப்பது குறித்து, அங்கன்வாடி மேற்பார்வையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள வட்டாரங்களில், அதிக கவனம் செலுத்த வேண்டும். பதிவு செய்யப்பட்ட குழந்தைகளின் எடை, உயரம் ஆகியவற்றை மறு ஆய்வு செய்யவேண்டும். ஊட்டச்சத்து குறைபாடுகள் இருப்பின், பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.