உள்ளூர் செய்திகள்

புதிய தொழிற்பள்ளி துவக்க விண்ணப்பம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் புதிய தொழிற்பள்ளிகள் துவக்குதல், தொடர் அங்கீகாரம், புதிய தொழிற்பிரிவுகள், கூடுதல் யூனிட்கள் துவக்க விண்ணப்பிக்கலாம்.மாவட்டத்தில் 2024-25ம் கல்வி ஆண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவக்குதல், தொடர் அங்கீகாரம் பெறுதல், புதிய தொழில்பிரிவுகள், கூடுதல் யூனிட் துவக்க ஜன.,2 முதல் www.skilltraining.tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பம் வந்து கொண்டிருக்கிறது.அங்கீகாரம் பெற இணையதளத்தில் ஒரு முறை விண்ணப்பித்தால் போதும். விண்ணப்பம், ஆய்வு கட்டணம் உரிய முறைப்படி செலுத்த வேண்டும். அனைத்து தொழிற்பிரிவிற்க்கும் சேர்த்து விண்ணப்ப கட்டணம் ரூ.5,000, ஆய்வு கட்டணமாக ரூ.8,000 செலுத்த வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்., 29. மேலும் அங்கீகாரம் குறித்த தகவல், அறிவுரைகளை அதே இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். கூடுதல் தகவலுக்கு 044 - 22501006 (113) என்ற தொலைபேசி எண் அல்லது detischennai@gmail.com மூலம் அறிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்