நீதிபதிகள் தேர்வு: இலவச பயிற்சி
மதுரை: சிவில் நீதிபதிகள் நியமனத்திற்கான எழுத்துத் தேர்வு முடிந்தது.நேர்காணல் தேர்விற்கான இலவச பயிற்சி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை (எம்.பி.ஏ.,) வழக்கறிஞர்கள் சங்கம், சுகுணா சட்ட அகாடமி சார்பில் துவங்கியது. சங்க பொதுச் செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். மூத்த வழக்கறிஞர் சங்கர் முரளி தலைமை வகித்தார்.சங்க தலைவர் எம்.கே.சுரேஷ், அகாடமி நிறுவனர் ஆர்.சுரேஷ் பேசினர். சங்க பொருளாளர் சுரேஷ்குமார் ஐசக்பால் நன்றி கூறினார். பயிற்சி ஜன.,22 வரை காலை 10:00 மணி முதல் மாலை 5:00மணிவரை நடைபெறும்.