உள்ளூர் செய்திகள்

புத்தகங்களே இல்லாத புதிய நுாலகம்!

கோவை: புதிதாக திறக்கப்பட்டுள்ள நுாலகம் மற்றும் அறிவு சார் மையத்தில், அனைத்து புத்தக அலமாரிகளும் காலியாக உள்ளன.கோவை ஆடிஸ் வீதியில் மாநகராட்சி சார்பில், 2.50 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நூலகம் மற்றும் அறிவு சார் மையம் திறக்கப்பட்டுள்ளது. இம்மாதம் கடந்த, 5ம் தேதி முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து ஆன்லைன் வாயிலாக, இந்த மையத்தை திறந்து வைத்தார்.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், திறக்கப்பட்டுள்ள இந்த அறிவு சார் மையத்தில், கம்ப்யூட்டர்கள், ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள், செமினார் ஹால் மற்றும் 100 பேர் அமர்ந்து படிக்கும் வாசிப்பறை என, பல நவீன வசதிகள் உள்ளன.குறிப்பாக, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., டி.என்.பி.எஸ்.சி., ரயில்வே மற்றும் வங்கி உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயனடையும் வகையில், அறிவு சார் மையம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் இவ்வளவு வசதிகள் கொண்ட இந்த நுாலகத்தில், புத்தகங்கள் மட்டும் இல்லை!18 ஆயிரம் புத்தகங்கள் வைக்க தேவையான அலமாரிகள் இருந்தும், அத்தனையும் காலியாக உள்ளன. பெயரளவுக்கு, நுழைவு வாயில் அருகில் உள்ள ஒரு அலமாரியில், 500 புத்தகங்கள் மட்டும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.இது குறித்து, மத்திய மண்டல உதவி கமிஷனர் செந்தில்குமரன் கூறியதாவது:இந்த அறிவு சார் மையத்துக்கு, தேவையான புத்தகங்கள் அனைத்தும் சென்னையில் இருந்துதான் வரும். இப்போது, 1700 புத்தகங்கள் உள்ளன. இதற்கு மாநகராட்சியில் இருந்து நிதி ஒதுக்கப்படுமா என தெரியவில்லை. நன்கொடையாளர்களை தொடர்பு கொண்டு புத்தகங்கள் வாங்கும் திட்டம் உள்ளது.இந்த மையத்தில் பெரும்பாலும் போட்டி தேர்வுகள் எழுதுபவர்கள் மற்றும் மேல் படிப்பு ஆய்வு மாணவர்கள் பயன்படுத்தும் நுால்கள் தான் அதிகம்இருக்கும். பொதுவான நுால்கள் குறைவாக இருக்கும்.ஆன்லைனில் படிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.இதற்கான பணியாளர்கள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. விரைவில் போட்டி தேர்வர்கள் முழுமையாக பயன்படுத்தும் வகையில், இந்த அறிவு சார்மையம் செயல்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்