உள்ளூர் செய்திகள்

கண்டக்டர் ஆன பள்ளி மாணவி

கலபுரகி: பள்ளி மாணவி ஒருவர், பஸ் கண்டக்டராக பணியாற்றி வீடியோ, சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்து உள்ளது.கலபுரகியின் அப்சல்பூர் கட்டரகா கிராமத்தை சேர்ந்தவர் வித்யா, 13. அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார். இவருக்கு பஸ் கண்டக்டராக பணியாற்ற வேண்டும் என்று ஆசை இருந்தது.கடந்த சில தினங்களுக்கு முன்பு, அப்சல்பூரில் உள்ள போக்குவரத்து பணிமனைக்கு சென்றவர், தனது ஆசை குறித்து போக்குவரத்து அதிகாரிகளிடம் கூறினர். அவரது ஆசையை நிறைவேற்றுவதாக, அதிகாரிகளும் உறுதி அளித்தனர். பஸ்சில் பயணியருக்கு, டிக்கெட் எப்படி வினியோகம் செய்வது என்று, பயிற்சி அளித்தனர்.இந்நிலையில் அப்சல்பூரில் இருந்து, கட்டரகா கிராமத்திற்கு சென்ற, அரசு பஸ்சில் வித்யா கண்டக்டராக நேற்று முன்தினம் பணி செய்தார். இதனை சிலர் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோ கவனத்தை ஈர்த்து உள்ளது. வித்யாவுக்கு பாராட்டுகள் குவிந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்