கல்லுாரி மாணவர்கள் ஆராய்ச்சிக்கு பரிசு
கோவை: சர்வதேச தண்ணீர் மாநாடு, மேகாலயாவில் உள்ள சில்லாங்கில் நடந்தது. இதில் மேகாலயா முதல்வர் கான்ராட் கே சங்மா மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.மாநாட்டின் ஒரு பகுதியாக, மலைப்பாங்கான பகுதிகளில் நீர் தொடர்பான சவால்களை எதிர்கொள்ள, புதுமையான சிந்தனைகளுக்கான தீர்வுகளை கண்டறிய, ஹேக்கத்தான் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் இந்தியா முழுவதும் இருந்து, 400 அணிகள் பங்கேற்றன. இரண்டாவது சுற்றுக்கு, 40 அணிகள் தேர்வு செய்யப்பட்டன. அதில் இருந்து, ஒன்பது அணிகள் இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டன.இறுதிப்போட்டியில், பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியின், சஸ்டைனபில் சிவில் இன்ஜினியரிங் மெட்டீரியல்ஸ் ஆய்வகத்தை சேர்ந்த மாணவர்கள் டானி மற்றும் வர்ஷினி மாணிக்கம் பங்கேற்றனர்.இவர்கள், வீடுகள் மற்றும் பிற குடியிருப்பு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவு நீரை, அக்வா ரிவைவ் என்னும் இயற்கையுடன் இணங்கும் நீர் வடிகட்டி குறித்த ஆய்வை சமர்ப்பித்து, மூன்றாம் பரிசு வென்றனர்.