உள்ளூர் செய்திகள்

புத்தகத்திருவிழாவில் மலர் கண்காட்சிக்கு ஏற்பாடு

தேனி: தேனியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட உள்ள 2ம் ஆண்டு புத்தகத்திருவிழாவில் பல்வேறு வகையான கண்காட்சிகள், வினாடி வினா, ஓவியப்போட்டிகள் நடத்த அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.தேனி பழனிசெட்டிபட்டியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நாளை முதல்(மார்ச் 3) முதல் புத்தகத்திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு அரசுத்துறைகள் சார்பில் பல்வேறு ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளன.தோட்டக்கலைத்துறை சார்பில் மலர்கண்காட்சி விற்பனை, கால்நடைத்துறை சார்பில் நாய்கள் கண்காட்சி, போலீசார் ஆயுத கண்காட்சி, தபால் தலைகள், பழைய நாணயங்கள் காட்சிப்படுத்துதல் உள்ளிட்டவை பற்றி கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிகாரிகள் ஆலோசித்தனர்.நகரின் எந்த பகுதியில் இருந்து பார்த்தாலும் தெரியும் வகையில் பெரிய அளவிலான பலுான் பறக்க விடப்பட உள்ளது. தினமும் பகலில் கண்காட்சிக்கு வருபவர்கள் பங்கேற்கும் வகையில் அறிவியல் வினாடி வினா, ஓவியப்போட்டி, தமிழ் வார்த்தை விளையாட்டு என தினம் ஒரு போட்டி நடத்தப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்