உள்ளூர் செய்திகள்

கல்லுாரி கருத்தரங்கில் விஞ்ஞானி வீரமுத்துவேல்

கோவை: இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின், முதுகலை கணினிப் பயன்பாட்டுத் துறை சார்பில்,கிளஸ்டர் 2024 என்ற தேசிய தொழில்நுட்பக் கருத்தரங்கம் நடந்தது.பல்வேறு கணினி துறைகளை சேர்ந்த மாணவர்கள், தங்கள் அறிவையும், திறமையையும் வெளிப்படுத்தும் வகையில், இக்கருத்தரங்கு நடந்தது. சிறப்பு விருந்தினராக, சந்திரயான் -3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் கலந்து கொண்டார். சந்திரயான்- 3 திட்ட அனுபவம், விண்கலத்தை வடிவமைக்கும் அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் பொறியியல் அற்புதங்கள் குறித்து பேசினார்.கல்லுாரியின் செயலர் சரஸ்வதி,நிர்வாக செயலர் பிரியா, முதன்மை நிர்வாக அலுவலர் கருணாகரன், முதல்வர் பொன்னுசாமி மற்றும் பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர் கருத்தரங்கில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்