உள்ளூர் செய்திகள்

சி.ஏ., தேர்வுகளுக்கான தேதிகளில் மாற்றம்

இது குறித்து இந்திய சார்டர்ட் அக்கவுன்டன்ட் மையம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:லோக்சபாவுக்கு, ஏப்., 19 முதல் ஜூன் 1ம் தேதி வரை தேர்தல் நடக்க உள்ளது. இதனால் வழக்கமாக மே மாதத்தில் நடக்கும் சி.ஏ., தேர்வு தேதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இன்டர்மீடியேட் குரூப் - 1 தேர்வுகள், மே 3, 5, 7ம் தேதிகளுக்கு பதில், மே 3, 5, 9ம் தேதிகளில் நடக்கும். குரூப் - 2 தேர்வுகள், மே 9, 11, 13ம் தேதிகளுக்குப் பதில், மே, 11, 15, 17ம் தேதிகளில் நடக்கும்.சி.ஏ., பைனல் குரூப் - 1 தேர்வுகள், மே, 2, 4, 6ம் தேதிகளுக்கு பதில், மே, 2, 4, 8ம் தேதிகளில் நடக்கும். குரூப் - 2 தேர்வுகள், மே 8, 10, 12ம் தேதிகளுக்கு பதில், மே 10, 14, 16ம் தேதிகளில் நடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்