உள்ளூர் செய்திகள்

சமூக அறிவியல் தேர்வு எளிது

திருப்பூர்: கட்டாய வினா உட்பட பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் பெரும்பாலான வினாக்கள் எளிமையாக இருந்தது. மேப் பகுதி மட்டும் சற்று கடினமாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வு நேற்று நடந்தது. 30 ஆயிரத்து, 620 மாணவர்கள் தேர்வெழுத வேண்டும்; 30 ஆயிரத்து, 169 தேர்வெழுதினர்; 451 பேர் தேர்வுக்கு வரவில்லை.தேர்வெழுதிய மாணவ, மாணவியர் பேட்டி:பிரவீன்குமார்: ஒரு மதிப்பெண்ணில் ஒரு கேள்வி மட்டும் புத்தகத்துக்குள் இருந்து கேட்கப்பட்டிருந்தது. வழக்கமாக, பயிற்சியெடுத்த கட்டாய வினாவே வந்திருந்ததால், எளிதில் விடையளிக்க முடிந்தது. எட்டு மதிப்பெண் வினாக்களில் படித்திருந்த கேள்விகளே வந்திருந்தன.நவநீதன்: மேப் பகுதியில் உலக வரைபடத்தில் இடங்களை குறிப்பது, புவியியல் பகுதி சற்று யோசித்து விடையளிக்கும் வகையில் இருந்தது. வழக்கமாக கேட்கப்படும் கேள்வி நடை இல்லாமல், வேறுபட்டிருந்தது. மற்ற வகையில் வினாக்கள் எளிமையாக இருந்தது; முழுமையாக விடையளித்துள்ளேன்.கீர்த்தனா: முதலில் இரண்டு மற்றும் ஐந்து மதிப்பெண் கட்டாய வினாவை தான் பார்த்தேன். அப்பகுதியில் அனைத்து வினாக்களும் ஏற்கனவே திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்டிருந்த வினாக்கள் என்பதால், விரைவாக விடையெழுதினேன். கூடுதல் மதிப்பெண் பெறும் வகையில் வினாத்தாள் இருந்தது.ரிபானா: வினாத்தாளில் எதிர்பார்த்த கேள்விகள் அனைத்தும் இடம் பெற்றிருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு முழுமையாக விடையளிக்க முடிந்தது. ஐந்து, எட்டு மதிப்பெண் வினாக்கள் சீக்கிரம் எழுதி முடித்து விட்டேன். நிச்சயம் நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.சென்டம் குறையும்கொடுவாய் அரசு மேல்நிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியர், (சமூகஅறிவியல்) முரளிதரன் கூறுகையில், முந்தைய ஆண்டை விட நடப்பு ஆண்டு கேள்வித்தாள் எளிமையாக இருந்தது. மெல்ல கற்கும் மாணவர்கள் யோசித்து விடையளிக்கும் வகையில் மேப் பகுதி இடம் பெற்றிருந்தது. ஒரு மதிப்பெண்ணில் ஒரு வினா, ஐந்து மதிப்பெண்ணில் ஒரு வினா புத்தகத்துக்குள் இருந்து சற்று யோசித்து, பின் விடையெழுதும் வகையில் இருந்தது. மற்ற வகையில் ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் கட்டாய வினாக்களுக்கு முழுமையாக மாணவர்கள் விடையெழுத முடியும்.வினாக்கள் எளிமை என்பதால், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும். வரலாறில் ஐந்து, புவியியல் எட்டு மதிப்பெண் பெறும் மேப் பகுதியில் யோசிக்கும் வகையில் வினாக்கள் என்பதால், சென்டம் சற்று குறையும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்