உள்ளூர் செய்திகள்

உரிமட்டை மூடாக்கு மாணவர்கள் விளக்கம்

ஆனைமலை: ஆனைமலை அருகே, உரிமட்டை மூடாக்கு முறை குறித்து வேளாண் கல்லுாரி மாணவர்கள் செயல் விளக்கம் அளித்தனர்.ஆனைமலை அருகே, ஆழியாறில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை மாணவியர், கிராமதங்கல் திட்டத்தின் கீழ், பயிற்சி, செயல்விளக்கம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுள்ளனர். அதில், விவசாயிகளின் உரிமட்டை மூடாக்கு முறை மற்றும் தென்னை நார் கழிவு இடுதல் குறித்து மாணவர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.மூடாக்கு அமைப்புதென்னை மரத்தின் வட்டப்பாத்திகளில், நார்பகுதி கீழ் இருக்குமாறு கனமான மட்டைப்பகுதி மேல் நோக்கி இருக்குமாறும், உரிமட்டைகளை அடுக்க வேண்டும். ஒரு பாத்திக்கு, 100 - 250 உரி மட்டைகள் தேவைப்படும்.ஒரு காய்ந்த மட்டை அதன் எடையில், 3 - 5 சதவீதம் நீர் பிடிப்புத்திறனை கொண்டுள்ளது. இந்த மட்டைகளின் கடினமான மேல் பகுதியானது நீர் ஆவியாதலை கட்டுப்படுத்தும். இம்மட்டைகள், 3 - 4 ஆண்டுகள் வரை அழிவில்லாமல் இருக்கும்.நார் கழிவு இடுதல்ஒரு பாத்திக்கு, 50 கிலோ என்ற அளவில் தென்னை நார் கழிவை இட்டு, அதை மண்ணால் மூடிவிடலாம். மக்கிய தென்னை நார் கழிவு உரத்தை இடுவதால், பல்வேறு பவுதீக பண்புகளை மண்ணில் கட்டமைப்பு, பொலபொலப்புத்தன்மை மற்றும் நீர்பிடிப்பு திறன் ஆகியவை மேம்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.வேளாண் பணிகளில் இருந்து கிடைக்கும் புல் மற்றும் களைகளையும், கிளைரிசிடியா போன்ற பசுந்தழை உரங்களையும், ஒரு பாத்திக்கு, 25 கிலோ என்ற அளவில் பரப்பி மண்ணின் ஈரப்பதத்தை காக்கலாம். இந்த பசுந்தழை உரங்களை வட்டப்பாத்திகளின் இடுவதால் மண்ணில் ஈரப்பதம் காக்கப்படுவதோடு நல்லதொரு உரமாகவும் அமையும் என, விளக்கமளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்