உள்ளூர் செய்திகள்

மாணவர்களுடன் காபி வித் கலெக்டர்

விருதுநகர்: விருதுநகரில் காபி வித் கலெக்டர் கலந்துரையாடல் 4 தனியார் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் 150க்கும் மேற்பட்ட முதல் முறை, இளம் வாக்காளர்களுடன் நடந்தது.கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்து பேசியதாவது:இந்திய ஜனநாயக தேர்தலில் பணம் பரிசுப்பொருள்கள் பெற்று ஓட்டுகளை பெறுவது, வன்முறை சூழல்களை ஏற்படுத்தி மக்களை ஓட்டளிக்க விடாமல் தடுப்பது, தவறான தகவல்களை பரப்புவது போன்ற மூன்று சவால்களை இந்திய தேர்தல் ஆணையம் எதிர்கொள்கிறது. அதனை தடுப்பதற்கான பல்வேறு கண்காணிப்புகள், தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.மாணவர்கள் யாருக்கு எதற்காக வாக்களிக்கிறோம் என்று நன்கு அறிந்து வாக்களிக்க வேண்டும். பணம், பொருள் எதுவும் பெறாமல் யார் தகுதியானவர்கள் என்று அறிந்து வாக்களிக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்