உள்ளூர் செய்திகள்

இலவச லேப்டாப் மாணவர்களே உஷார்

பொள்ளாச்சி: சமூக வலைதளங்களில் 'பிரதம மந்திரி இலவச லேப்டாப் 'திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, 'லிங்க்' கொடுக்கப்பட்டு குறுஞ்செய்திகள் வலம் வருகின்றன. இதன்காலஅவகாசம், வரும் 29ம்தேதியுடன் முடிவதாக கடந்த இரண்டு நாட்களாக அதிகளவில் பகிரப்பட்டு, மாணவர்கள் குறிவைத்து ஏமாற்றப்படுகின்றனர்.இதுபோன்று சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை நம்பவேண்டாம், இலவச லேப்டாப் திட்டம் ஏதும் இல்லை என்பதை ஏ.ஐ.சி.டி.இ., அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.மேலும், இதுபோன்ற திட்டங்கள், அறிவிப்புகளின் உண்மைத்தன்மையை,httpS:l/www.aicte-india.org/என்ற இணையதளத்திலும், 011-29581000 என்ற எண்ணிலும் அழைத்து தெரிந்துகொள்ளலாம். கல்லுாரிகள் இதுகுறித்து, மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஏ.ஐ.சி.டி.இ., அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்