வாழை சாகுபடிக்கு மாணவர்கள் தீர்வு
மதுரை: மதுரை விவசாய கல்லுாரி மாணவர்கள் யோகேஷ், விஷால், நரேன் கார்த்திக், மார்த்தாண்டன், காவியன், திருமலை, ஷோலேஷ், பார்த்தசாரதி, முகமது ஷெபின், பவன்குமார் ஆகியோர் வாழை சாகுபடிக்கு தீர்வு கொடுத்தனர்.மேலூர் அருகே புதுசுக்காம்பட்டி கிராமத்தில் பெருமளவில் வாழை சாகுபடி நடக்கிறது. வாழையில் பனாமா வாடல் நோயின் தாக்கம் பெருமளவில் உள்ளது. அதற்கு தீர்வாக கார்பண்டசிம் என்ற பூஞ்சைக்கொல்லியை வைத்து தண்டு ஊசி மூலம் நோயைக் கட்டுப்படுத்தும் முறையை விவசாயிகளுக்கு விளக்கினர்.