உள்ளூர் செய்திகள்

பட்டய பயிற்சி மாணவர்களுக்கு அழைப்பு

சென்னை: சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், பட்டயப் பயிற்சிக்கான மாணவர்கள் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமான, சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2024 -25ம் ஆண்டு முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான சேர்க்கைக்கு முன்பதிவு துவங்கி உள்ளது.செப்டம்பரில் துவங்கும் இப்பயிற்சியின் காலம் ஓராண்டு. பாடத்திட்டம் தமிழில் மட்டுமே நடத்தப்படும். விண்ணப்பிப்பதற்கான தேதி, பயிற்சி கட்டண குறித்த விபரங்கள், www.tncuicm.com இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.மேலும், விபரங்களை சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையம் அல்லது 2536 0041 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்