உள்ளூர் செய்திகள்

மறுமதிப்பீட்டு கட்டணம் அரசுக்கு கோரிக்கை

சென்னை: வணிகவியல் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், மறு மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்றால், அந்த மாணவர் மறுமதிப்பீட்டிற்காக செலுத்திய கட்டணங்களை திரும்ப அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தட்டெழுத்து, சுருக்கெழுத்து, கணினி பள்ளிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.சங்கத்தின் தலைவர் சோமசங்கர், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:அரசு தொழில்நுட்ப கல்வி இயக்கக துறை, தட்டெழுத்து, சுருக்கெழுத்து, கணக்கியல், கணினி அலுவலக நடைமுறை உள்ளிட்ட வணிகவியல் கல்வி தேர்வை நடத்துகிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், மறு மதிப்பீடு செய்வதற்கு, உரிய கட்டணங்களை செலுத்துகின்றனர். மறு மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்றிருப்பதாக அறிவிப்பு வெளியாகிறது.அப்போது, தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மறு மதிப்பீட்டிற்காக செலுத்திய அனைத்து கட்டணத்தையும் திரும்ப அளிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்