ராஜஸ்தான் கைவினை பொருட்கள் கண்காட்சி
சேலம்: சேலம், சகாதேவபுரம், சங்கர் நகரில் உள்ள ரோட்டரி ஹாலில் ராஜஸ்தான் கைவினை பொருட்கள் கண்காட்சி, இன்று நடக்கிறது.இதுகுறித்து கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது:ராஜஸ்தான் கலை கண்காட்சியில் இந்தியாவின் சிறந்த கைவினை கலைஞர்களின் படைப்புகளை நேரடி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். ஜெய்பூர் பெட்ஷீட் விற்கிறோம். உடையாத கண்ணாடி வளையல், 3 ஜோடி, 99 ரூபாய்; 3 டீ- ஷர்ட், 999 ரூபாய்; 3 'பலாசோ பேன்ட்', 999 ரூபாய்க்கு கிடைக்கும். ருத்ராட்சை மாலை, கருங்காலி மாலைகள்(வெள்ளி கம்பி கட்டியது), மரகத லிங்கங்கள் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.