உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயிற்சி

மாற்றுத்திறனாளிகளின் வளர்ச்சியை நோக்கமாக கொண்டு, மத்திய அரசால் நிறுவப்பட்ட பிரத்யேக கல்வி நிறுவனமான 'நேஷனல் இன்ஸ்டிடியூட் பார் எம்பவர்மெண்ட் ஆப் பர்சன்ஸ் வித் மல்ட்டிபில் டிசபிலிட்டிஸ்' பல்வேறு தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கிறது.மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த திட்டத்தில், எஸ்.எஸ்.சி., ஆர்.ஆர்.பி., பேங்கிங், இன்ஸ்சூரன்ஸ், கிளாட், யு.பி.எஸ்.சி., போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அறிவுசார் குறைபாடு, மன இறுக்கம், கற்றல் குறைபாடு மற்றும் மனநல குறைபாடுகள் உட்பட பல்வேறு விதமான மாற்றுத்திறனாளிகள் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.சென்னை அருகே முட்டுக்காட்டில் அமைந்துள்ள இந்நிறுவனத்தில் வழங்கப்படும் பயிற்சியில், குறைந்தது 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை பங்கேற்கலாம். ஆறு முதல் ஒன்பது மாதங்கள் வரையில் இப்பயிற்சி வழங்கப்படுகிறது. கூடுதல் தகவல்களுக்கு www.niepmd.tn.nic.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்