உள்ளூர் செய்திகள்

கல்லுாரி படிக்க மாணவருக்கு உதவித்தொகை

செங்கல்பட்டு: செய்யூர் அடுத்த செங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் விக்னேஷ், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றார். அவரது தந்தை இறந்துவிட்டார். தாய் மாற்றுத்திறனாளி. இவர் கல்லுாரியில் சேர்ந்து படிக்க பணம் இல்லாமல் தவித்து வந்தார்.அதன்பின், தனியார் கல்லுாரியில் பி.காம்., படிக்க, கல்வி உதவித்தொகை கோரி, கடந்த 26ம் தேதி அவரது தாய் கலெக்டரிடம் மனு அளித்தார். இந்த மனுவை பரிசீலனை செய்து, சமூக பொறுப்பு நிதியில் இருந்து, கல்வி உதவித்தொகையாக, 26,000 ரூபாய் காசோலையை, கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்