முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்கம்
கோவை: கோவை மாவட்டத்தில், 2024--2025ம் கல்வியாண்டுக்கான அரசு மற்றும் உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கான முதலாமாண்டு வகுப்புகள், நாளை துவங்குகின்றன.தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், மாணவர்களுக்கான கலந்தாய்வுகள், மே மூன்றாவது வாரத்தில் துவங்கி நடைபெற்று வந்தன. 80 சதவீத இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள காலியிடங்களை நிரப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.இந்நிலையில், இக்கல்லூரிகளில், முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நாளை துவங்கவுள்ளன. இதற்கான ஆயத்தப் பணிகள், அனைத்துக் கல்லூரிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராகிங் தடுப்பு உள்ளிட்டவை குறித்து, அனைத்துக் கல்லூரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு கல்லூரிகளில், 20 சதவீத கூடுதல் இடஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு கிடைத்தவுடன், அந்த இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுவர் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.