திறன் மேம்பாட்டில் ஆர்வம்
பெங்களூரு மற்றும் சென்னையில் உள்ள 87 சதவீத தொழில் வல்லுநர்கள் 25ம் நிதியாண்டில், அவர்களது திறன் மேம்பாட்டில் விருப்பம் கொண்டு உள்ளனர் என்று 'கிரேட் லேர்னிங்' வெளியிட்டுள்ள 'அப்ஸ்கில்லிங் டிரெண்ட்ஸ் அறிக்கை 2024-25' என்ற ஓர் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.உற்பத்தி, பொறியியல் மற்றும் பி.எப்.எஸ்.ஐ., எனும் பேங்கிங், பினான்சியல் சர்வீசஸ், இன்சூரன்ஸ் துறைகள் சார்ந்த தொழில் வல்லுநர்களிடையே திறமையை மேம்படுத்தும் எண்ணம் அதிகமாக உள்ளது. ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், டேட்டா சயின்ஸ் மற்றும் மிஷின் லேர்னிங் ஆகியவை திறன் மேம்பாட்டில் அதிக விருப்பமான களமாக உருவெடுத்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 24-25ம் நிதியாண்டில் 83 சதவீத இளம் பட்டதாரிகள் திறமையை மேம்படுத்தும் எண்ணம் உள்ளதாக தெரிவித்துள்ளனர். 23-24ம் நிதியாண்டில் 75 சதவீத இளம் பட்டதாரிகளே இந்த கருத்தை தெரிவித்திருந்த நிலையில், இந்த ஆண்டு 8 சதவீதம் அதிகரித்துள்ளது.