உள்ளூர் செய்திகள்

பட்டயக் கணக்காளார் பட்டமளிப்பு விழா

சென்னை: இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ஐசிஏஐ) சார்பில் சிஏ பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது.இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனமானது (ஐசிஏஐ) நாடு முழுவதும் 13 மாநிலங்களைச் சேர்ந்த பட்டதாரிகள் மற்றும் புதிதாக பதிவு செய்யப்பட்ட பட்டயக் கணக்காளர்கள் என சுமார் 10,000 பேருக்கு பட்டங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிறுவனம் ஆண்டுக்கு இரண்டு முறை பட்டமளிப்பு விழாவை நடத்துகிறது.சிறப்பு விருந்தினர், டி.வி. மோகன்தாஸ் பாய், ஆரின் கேபிடல் & மணிப்பால் குளோபல் எஜுகேஷன் மற்றும் சி.ஏ. ஐசிஏஐ இன் தலைவர் ரஞ்சித் குமார் அகர்வால், புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட பட்டயக் கணக்காளர்களைப் பாராட்டி பெங்களூரில் இருந்து நேரடி உரை நிகழ்த்தினர்.சி.ஏ. ஐசிஏஐ இன் தலைவர் ரஞ்சித் குமார் அகர்வால் பேசுகையில், இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ஐசிஏஐ) 75வது ஆண்டுவிழவை கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு, சிஏ படிப்பிற்கு 1,38,000 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். சிஏ இடைநிலை மற்றும் அறக்கட்டளை பவுண்டேஷன் கோர்ஸ் தேர்வுகளை ஆண்டுக்கு மூன்று முறை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழில்முறை மேம்பாட்டிற்காக ஏஐ இன் ஐசிஏஐ என்ற குழு செயல்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கான தனி ஜிபிடி (பொதுத் திறன் தேர்வு) அறிமுகபடுத்தப்பட்டுள்ளது, என்றார்.அந்தந்த பிராந்தியங்களில் மத்திய மற்றும் மண்டல கவுன்சில் உறுப்பினர்கள் புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு உறுப்பினர் சான்றிதழ்களை வழங்கினர். சென்னையில் நடந்த விழாவில் பட்டயக் கணக்காளர்கள் ராஜேந்திர குமார், ஸ்ரீப்ரியா,ரேவதி ரகுநாதன், அருண்அய்யம்பாளையம் வெங்கடேசன் மற்றும் உமா ஷிவ் ஆகியோர் கலந்து கொண்டு சுமார் 3000 பங்கேற்பாளர்களுக்கு புதிய உறுப்பினர் சான்றிதழ்களும், பட்டங்களையும் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்