தொடக்க கல்விக்கு புதிய இயக்குனர்
சென்னை: தொடக்கக் கல்வி பிரிவின் புதிய இயக்குனராக நரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.பள்ளி கல்வித் துறையில் நேற்று முன்தினம், ஒன்பது இணை இயக்குனர்களுக்கு இடமாறுதல் அளிக்கப்பட்டது. நேற்று, நான்கு அதிகாரிகள் மாற்றப்பட்டனர். அரசு தேர்வுத் துறை இடைநிலைப் பிரிவு இணை இயக்குனராக இருந்த நரேஷ் பதவி உயர்வு பெற்று, தொடக்க கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் லதா, அரசு தேர்வுத் துறை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் உமா, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனராகவும், தொடக்க கல்வி இயக்குனராக இருந்த சேதுராம வர்மா, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.