உள்ளூர் செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி., தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்

சென்னை: டி.என்.பி.எஸ்.சி., எனப்படும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டு உள்ளார்.டி.என்.பி.எஸ்.சி., தலைவராக இருந்த பாலச்சந்திரன், 2022 ஜூனில் ஓய்வு பெற்றார். அதன்பின், டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினராக இருந்த முனியநாதன், பொறுப்பு தலைவராக செயல்பட்டு வந்தார்.கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற டி.ஜி.பி., சைலேந்திரபாபுவை, டி.என்.பி.எஸ்.சி., தலைவராக நியமிக்க, தமிழக அரசு பரிந்துரை செய்தது. அதை கவர்னர் நிராகரித்தார்.இரண்டு ஆண்டுகளாக, புதிய தலைவர் நியமிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது வருவாய் நிர்வாக ஆணையராக உள்ள, ஐ.ஏ.எஸ்., அதிகாரி எஸ்.கே.பிரபாகர், டி.என்.பி.எஸ்.சி., தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். கவர்னர் ரவி ஒப்புதலுடன், இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.டி.என்.பி.எஸ்.சி., தலைவராக எஸ்.கே.பிரபாகர் பதவியேற்கும் நாளில் இருந்து, ஆறு ஆண்டுகள் அல்லது 62 வயது இவற்றில், எது முந்தையதோ, அதுவரை அப்பதவியில் இருப்பார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்