டாக்டர்கள் டீனாக பதவி உயர்வு
கோவை: தமிழகத்தில், 14 டாக்டர்கள் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீனாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தடயவியல் டாக்டராக பணிபுரிந்து வந்த ஜெயசிங், விருதுநகர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, உடற்கூறுயியல் பேராசிரியராக பணிபுரிந்து வந்த டாக்டர் ரோகினிதேவி வேலுார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீனாக நியமிக்கப்பட்டுள்ளார்.