உள்ளூர் செய்திகள்

பல்கலையில் சர்வதேச மாநாடு

மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் வேளாண்மை, தொழில் உயிரியல் மருத்துவ செயல்முறைகளில் பூஞ்சை பயன்பாடுகள் குறித்த சர்வதேச மாநாடு நடந்தது.பல்கலை உயிரியல் அறிவியல் பள்ளி பேராசிரியர் குமரேசன் வரவேற்றார். அமைப்பு செயலாளர் சண்முகையா, உயிரியல் மருத்துவப் பயன்பாடுகள், விவசாயத்திற்கும் தேவையான பூஞ்சைகளின் சிகிச்சை திறன்களை வெளிக்கொண்டுவரும் மரபணுவில் ஆராயப்படாத பூஞ்சைகள் குறித்த ஆராய்ச்சி அவசியம் குறித்து பேசினார். பேராசிரியர் சந்திரசேகரன், வேளாண்மை கல்லுாரி ஆராய்ச்சி மைய இயக்குநர் நக்கீரன், கயானா பல்கலை இயக்குநர் கோமதிநாயகம், சிண்டிகேட் உறுப்பினர் மயில்வாகணன், தாவர நோயியல் நிபுணர் கல்பனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்