அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
சென்னை: நடப்பு கல்வியாண்டிற்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 16 துவங்கும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.2024-25ம் கல்வி ஆண்டிற்கான அரையாண்டுத் தேர்வு டிச.,16 துவங்கி 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. டிச.,24 முதல் ஜனவரி 1ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை எனவும், ஜன.,2ம் தேதி மூன்றாம் பருவம் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.