மாணவர் விடுதிக்கு கட்டில்
தேனி: மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 295 கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், நான்கு உண்டு உறைவிட பள்ளிகள், 55 மாணவர் விடுதிகள் உள்ளன. இப்பள்ளிகளில் கடந்த அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் அதிகம். இதில், பிளஸ் 2 வகுப்பில் 14 பள்ளிகள், 10ம் வகுப்பில் 18 பள்ளிகள், இரு வகுப்பிலும் ஐந்து பள்ளிகளில் நுாறு சதவீத தேர்ச்சியை மாணவர்கள் பெற்றுள்ளனர்.அரசு விடுதி மாணவர்களுக்கு கட்டில் வழங்க திட்டம் தயாரித்துள்ளோம்.செக்கானுாரணி பெண்கள், ஆண்கள் கள்ளர் சீரமைப்பு மேல்நிலைப்பள்ளி, தேனி வெள்ளையம்மாள்புரம் அரசு பள்ளிகளில், 149 கோடி ரூபாய் செலவில் உண்டு உறைவிட பள்ளி அமைக்க நபார்டு ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளோம்.