உள்ளூர் செய்திகள்

மாணவ, மாணவியர் மகிழ்ச்சி

புதுச்சேரி: தினமலர்-வழிகாட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.விஞ்ஞானியாக ஆர்வம்ஸ்ரீபதி பாலாஜி, சிதம்பரம்: தினமலர் வழிகாட்டி தொடர்பாக ஆன்லைனில் விளம்பரத்தை பார்த்து, விண்ணப்பித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இங்கு, ராணுவத்துறை சார்ந்த விஞ்ஞானி பேசிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. பி.டெக்., படித்துவிட்டு, விஞ்ஞானியாக ஆவதற்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. கருத்தரங்கின் நடுவே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளித்து முதல் பரிசாக லேப் டாப் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.குழப்பத்திற்கு தீர்வுதனுஸ்ரீ, ஏம்பலம், புதுச்சேரி: புதுச்சேரி அரசு பள்ளியில் படித்து வருகிறேன். தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சிக்கு வரும்போது, மேலே என்ன படிக்கலாம் என்ற குழப்பத்தில் வந்தேன். இங்கு வந்த பிறகு, கல்வியாளர்களில் பல்வேறு கருத்துகள் பயனுள்ளதாக இருந்தது. குறிப்பாக, டி.ஆர்.டி.ஓ., தொடர்பாக விஞ்ஞானி பேசியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.தன்னம்பிக்கை ஏற்பட்டதுசாய் ஆதித்யன், விழுப்புரம்: தினமலர் வழிகாட்டிக்கு வரும்போது, என்ன படிக்கலாம் என மிகவும் குழப்பமாக இருந்தது. நிகழ்ச்சியை பார்த்த பிறகு தௌிவு கிடைத்துள்ளது. என்ன படிக்கலாம், வேலை வாய்ப்பு குறித்து கல்வியாளர்கள் அளித்த விளக்கத்தால் தௌிவு கிடைத்ததோடு, தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது.மாணவர்களின் நண்பன் தினமலர்அபிநயஸ்ரீ, புதுச்சேரி: தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சிக்கு, இன்ஜினியரிங் தொடர்பான பாடப் பிரிவுகள், வேலை வாய்ப்புகள் குறித்து அறித்து கொள்வதற்காக வந்தேன். இங்கு வந்த பிறகு ஒரு நல்ல தெளிவு கிடைத்துள்ளது. எந்த துறையில் என்ன படித்தால் வேலை வாய்ப்பு உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன். தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி மாணவர்களின் நண்பராக உள்ளது.சி.ஏ., படிக்க ஆசைவைஷ்ணவி, கடலுார்: தினமலர் நாளிதழ் மாணவர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதலை வழங்கி வருகிறது. பல்வேறு கல்லுாரிகளை பற்றிய விவரங்களை அறித்து கொள்ள முடிந்தது. சி.ஏ., படிப்பு தொடர்பான கருத்து என்னை மிகவும் கவர்ந்தது.பயனுள்ள நிகழ்ச்சிவினோதி விழுப்புரம்: தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சிக்கு எனது பெற்றோர் தான் விளம்பரத்தை பார்த்து அழைத்து வந்தார். ஆனால், இங்கு வந்த பிறகு இன்ஜினியரிங் தொடர்பாகவும், டி.ஆர்.டி.ஓ., குறித்தும் பேசிய விதம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்