இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு
திருப்பூர்: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், தமிழகம் முழுவதும் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர், காங்கயம், உடுமலை ஆகிய மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதிக்கும் தலா மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இக்குழுக்கள் மூலம், திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி; சென்னிமலையில் உள்ள பொது நுாலகம்; உடுமலை, தளி ரோட்டிலுள்ள கிளை நுாலகம் ஆகியவற்றில், திருக்குறள் பயிற்சி வகுப்புகள், ஆக., இரண்டாவது வாரம் முதல் நடைபெற உள்ளன.முற்றிலும் இலவசமான இப்பயிற்சி வகுப்புகள், வாரந்தோறும் சனிக்கிழமை, மதியம், 2:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை நடைபெறும். ஆண்டுக்கு 30 வகுப்புகள் நடத்தப்பட்டு, பயிற்சி முடித்தவர்களுக்கு பங்கேற்புச் சான்று வழங்கப்படும்.பங்கேற்க விரும்புவோர், சுய விவரத்துடன், ஆதார் நகல் இணைத்து, ddtamil607@gmail.com என்கிற இ-மெயிலிலும்; கலெக்டர் அலுவலக வளாகம், அறை எண்: 608ல் இயங்கும் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் அலுவலகத்துக்கு தபாலிலும் அனுப்பிவைக்கலாம்.மேலும் விவரங்களுக்கு, 93614 61882, 87606 06234 என்கிற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.