உள்ளூர் செய்திகள்

இன்ஜினியரிங் மாணவியருக்கு கல்வி உதவித்தொகை

சென்னை : அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்கு, இன்ஜினியரிங் மாணவியரிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஏ.ஐ.சி.டி.இ., சார்பில், தொழில்நுட்ப கல்வி படிக்கும் மாணவியரை ஊக்கப்படுத்த, 'பிரகதி கல்வி உதவித்தொகை' வழங்கப்படுகிறது.இதற்கு, அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில், இளநிலை பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமா படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவியர், அக்டோபர், 31க்குள், https://scholarships.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.ஒரு குடும்பத்தில் இரண்டு பெண்கள் பயன்பெற முடியும். பெற்றோர் ஆண்டு வருமானம், 8 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவோருக்கு, ஆண்டுக்கு 50,000 ரூபாய் வீதம், அதிகபட்சமாக நான்காண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்