உள்ளூர் செய்திகள்

காலை உணவுத்திட்டம் துவக்கிய அமைச்சர்

மதுரை: மதுரை மாநகராட்சியில் 95 அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 16 ஆயிரத்து 416 மாணவர்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.ஆரப்பாளையம் கிராஸ் ரோடு கேப்ரன்ஹால் பெண்கள் மேனிலை பள்ளியில் உணவு வழங்குவதை மேயர் இந்திராணி, கமிஷனர் சித்ரா மாணவர்களுடன் உணவு சாப்பிட்டனர். இத்திட்டத்தில் மாநகராட்சியின் 169 பள்ளிகளில் 23 ஆயிரத்து 105 மாணவர்கள் பயன்பெறுகின்றனர். துணைமேயர் நாகராஜன், துணை கமிஷனர் ஜெய்னுலாபுதீன், கல்வி அலுவலர் ஜெய்சங்கர், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், கவுன்சிலர் ஜென்னியம்மாள் பங்கேற்றனர்.மேலுார்: மேலுார் அல் அமீன் உருது பள்ளியில் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் பிரவீன் குமார் பங்கேற்றனர். இதில் அமைச்சர் பேசியதாவது: மாவட்டத்தில் 131 பள்ளிகளில் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் அனைத்து தரப்பினருக்குரியவராக இருந்தாலும் கருணாநிதி வழியில் சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக உள்ளார். அவர் வழியில் நாங்களும் உள்ளோம் என்றார். பள்ளியின் சார்பில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற அமைச்சர் சொந்த நிதியில் ரூ.5 லட்சம் வழங்குவதாக தெரிவித்தார்.வாடிப்பட்டி போடிநாயக்கன்பட்டி புனித சார்லஸ் ஆரம்ப பள்ளியில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். மகளிர் திட்ட இயக்குனர் தமிழரசி, உதவி இயக்குனர் மணிகண்டன், பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், துணைத் தலைவர் கார்த்திக் முன்னிலை வகித்தனர். தாளாளர் ஜெயசீலன், தலைமை ஆசிரியர் சதானந்தம், தி.மு.க., ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன், முன்னாள் நகர செயலாளர் பிரகாஷ், கவுன்சிலர் ஜெயகாந்தன், அணி நிர்வாகிகள் முரளி, அரவிந்தன் பங்கேற்றனர். ஆசிரியர் அண்ணாதுரை நன்றி கூறினார்.எழுமலை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து எழுமலை அரிசன் துவக்கப்பள்ளியில் காலை உணவு வழங்கும் விழா செயலாளர் பொன் கருணாநிதி தலைமையில் நடந்தது.தலைமை ஆசிரியர் வளர்மதி வரவேற்றார். வட்டாரக் கல்வி அலுவலர் சின்னவெள்ளைச்சாமி, சேடபட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், எழுமலை பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், செயல் அலுவலர் ஜெயமுருகன், ஊரக வாழ்வாதார இயக்க சமுதாய அமைப்பாளர் ஜெயந்தி, வட்டார இயக்க மேலாளர் மகேந்திரன், ஒருங்கிணைப்பாளர் ஜெயமாரி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கினர்.உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் காலை உணவுத்திட்டத் துவக்க விழா தலைமை ஆசிரியர் மதன்பிரபு தலைமையில் நடந்தது. உதவி பெறும் பள்ளிகளுக்கு காலை உணவுத்திட்டத்தை விரிவுபடுத்தியதற்கு நன்றி தெரிவித்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தபால் எழுதி அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்