உள்ளூர் செய்திகள்

ஜீ தமிழில் புதிய தொடர்

சென்னை: ஜீ தமிழின் புதிய மெகா தொடர் 'அண்ணாமலை குடும்பம்' 230 அடி சேலையில் ஒற்றுமைச் செய்தியை வெளிப்படுத்தி நவம்பர் 24 முதல் மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.தமிழ் சின்னத்திரையில் குடும்ப உணர்வுகளையும், தமிழ் பண்பாட்டையும் பிரதிபலிக்கும் தொடர்களை வழங்கி வரும் ஜீ தமிழ், இப்போது கூட்டுக் குடும்பத்தின் ஒற்றுமையை மையமாகக் கொண்ட புதிய மதிய நேர தொடரை அறிமுகப்படுத்துகிறது. “அண்ணாமலை குடும்பம்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தொடர் நவம்பர் 24 முதல் திங்கள் முதல் சனி வரை மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.இந்த தொடருக்கான சிறப்பு விழாவில், 230 அடி நீளத்தில் தயாரிக்கப்பட்ட சேலை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. “2.30” என்ற நேரத்தை குறிக்கும் வகையில், அண்ணாமலை சில்க்ஸ் நிறுவனரின் தலைமையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இணைந்து நெய்த இந்த சேலை ஒற்றுமையின் அடையாளம் என ஜீ தமிழ் மற்றும் ஜீ திரை சேனல் தலைமை அதிகாரி ராகவன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்