உள்ளூர் செய்திகள்

பள்ளிகள் திறப்பு புத்தகம் வினியோகம்

திருப்பூர்: அரையாண்டு விடுமுறை முடிந்து, நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது.மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டது. மதிப்பீடு செய்யப்பட்ட அரையாண்டு தேர்வு விடைத்தாள்களும் வழங்கப்பட்டன.விடுமுறை முடிந்து பள்ளி திறப்பு என்பதால், தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு சென்ற முதன்மை கல்வி அலுவலர் புனித அந்தோணியம்மாள், துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகங்களை வழங்கினார்.அதன்பின், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று இறைவணக்க கூட்டத்தில் சி.இ.ஓ. கூறியதாவது:'தேர்வு நெருங்குகிறது; உங்கள் மேல் நம்பிக்கை வைத்து, உங்கள் கனவுகளை நிறைவேற்ற பெற்றோர் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.தேர்வுக்கு சில நாட்கள் மட்டுமே இருப்பதால், பொறுப்புணர்ந்து படியுங்கள். கல்வி தரும் முன்னேற்றத்தை வேறு எதுவும் உங்களுக்கு தராது.தேர்வில் நீங்கள் பெறும் மதிப்பெண் உங்களுக்கும், நீங்கள் படித்த பள்ளிக்கும், ஆசிரியருக்கு, பெற்றோருக்கும் பெருமை சேர்க்கும்.பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், நேரத்தை வீணாக்காமல் படிப்பில் கவனத்தை செலுத்துங்கள்.' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்