உள்ளூர் செய்திகள்

பாம்பன் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் அன்னை ஸ்கொலாஸ்டிகா பெண்கள் கல்லூரியில் கலை, அறிவியல் கண்காட்சி நடந்தது.தாளாளர் அமுதாதியோஸ் குத்து விளக்கேற்றி துவக்கினார். ராமேஸ்வரம் தாசில்தார் முரளிதரன் கண்காட்சியை பார்வையிட்டு கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகளை பாராட்டினார். 'அறிவியலும், வாழ்வியலும்' என்ற தலைப்பில் முதல்வர் ஆனிபெர்பெட்சோபி பேசினார்.அறிவியல் மற்றும் நாணயம், புத்தக கண்காட்சி, கடல் சிப்பிகளால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் கண்காட்சிகள் நடந்தது. 20க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கண்காட்சியை கண்டு ரசித்தனர். பேராசிரியர் சுவிக்லின் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ரூபி, எம்ல்டா ராணி, மோட்ச ராக்கினி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்