உள்ளூர் செய்திகள்

அமெரிக்கன் கல்லுாரி பட்டமளிப்பு விழா

மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. சி.எஸ்.ஐ., பிஷப் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் பங்கேற்றார். முதல்வர் பால் ஜெயகர் வரவேற்றார். மாநில சிறுபான்மை ஆணைக்குழு தலைவர் ஜோ அருண் பட்டம் வழங்கி பேசுகையில், ''இன்றைய அவசர உலகில் பலர் சுயநலவாதிகளாக உள்ளனர். ஒன்றை செய்வதால் தங்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை மட்டுமே சிந்திக்கின்றனர். பெற்றுக்கொள்வதை விட கொடுப்பதே சிறந்த பண்பு. மாணவர்கள் அதை வளர்த்துக் கொண்டால் வாழ்வில் எவ்வித துயரமும் ஏற்படாது'' என்றார்.1898 இளங்கலை, 684 முதுகலை மாணவர்கள் பட்டம் பெற்றனர். கல்லுாரி துணை முதல்வர் சாமுவேல் அன்புச்செல்வன், நிதி காப்பாளர் பியூலா ரூபி கமலம், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி இஸ்ரேல் உட்பட துறைத் தலைவர்கள் பேராசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்