உள்ளூர் செய்திகள்

மாநில குத்துச்சண்டை: மாணவி வெற்றி

ராமநாதபுரம்: தேனியில் நடந்த மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் ராமநாதபுரம் மாணவி வெங்கல பதக்கம் வென்றார்.தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் தேனியில் உள்ள தனியார் பள்ளியில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் நடந்தது.இதில் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவி எஸ்.கரோலின் கலந்துகொண்டு, மூன்றாம் இடம் பெற்று வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.மாவட்டத்திற்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் விக்டோரியா டயஸ், உடற்கல்வி இயக்குனர் அதிவீர் நாச்சியப்பன், ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்