உள்ளூர் செய்திகள்

பாலபோதபவனம் பள்ளி மாணவர்கள் சாதனை

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு பாலபோதபவனம் பள்ளி மாணவர்கள் யோகா போட்டியில் சாதனை படைத்தனர்.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், சுவாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் மாநில அளவில் சூரிய நமஸ்கார போட்டி நடந்தது. போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.இதில், பண்ருட்டி அடுத்த செம்மேடு பாலபோதபவனம் துவக்கப்பள்ளி மாணவர்கள் 73பேர் பங்கேற்றனர். 150 சுற்றுகள் சூரிய நமஸ்காரம் செய்த 52 மாணவர்கள்முதல் பரிசும், 125 சுற்றுகள் நமஸ்காரம் செய்த 5 மாணவர்கள் 2ம் பரிசும், செய்து சாதனை படைத்தனர்.போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை ஓய்வு பெற்ற சி.இ.ஓ., விஜயராகவன், பள்ளி தாளாளர் குமுதா ரமேஷ், முதல்வர் ஜெயக்குமார், யோகா ஆசிரியர்பாஸ்கரன் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்