உள்ளூர் செய்திகள்

மாநில புத்தக விமர்சன போட்டி

விருதுநகர்: விருதுநகர் ரீடர்ஸ் கிளப், இதயம் குடும்பம் இணைந்து வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி, ஜே.சி.ஐ., விருதுநகர் ஹேப்பி சார்பில் மாநில புத்தக விமர்சனப் போட்டி இறுதித்தேர்வு நடந்தது.இதில் கல்லுாரி செயலாளர் மதன், டாக்டர் குமாரராஜன், ஷ்யாம்ராஜ், மாஸ்டர் மைண்ட் ரீடர்ஸ் கிளப் நிறுவனர் அமுதா சற்குருநாதன் உள்பட பலர் பங்கேற்றனர். பரிசுகளை இதயம் விருதுநகர் உலகளாவிய வாசகர் மன்றத்தின் வெளிப்புற நடுவர்கள் வாசகர் மன்றம் வழங்கினர்.இதில் மாவட்ட கல்வி, பயிற்சி நிறுவனம் விரிவுரையாளர் சாந்தி (ஓய்வு), முதுகலை தமிழ்த்துறை தலைவர் ஸ்ரீதர், பொறியாளர் ஜெயந்தி, ஆலோசனை பொறியாளர் பிரிந்தா குமார், மதுரை லேடி டோக் கல்லுாரி உதவி பேராசிரியர் லுானா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்