உள்ளூர் செய்திகள்

சிறந்த அறிவியல் படைப்புகளுக்கு பரிசு

சென்னிமலை: சென்னிமலை தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு, புதிய கண்டுபிடிப்புகளின் கண்காட்சி, சென்னிமலையில் ஆறு நாட்கள் நடந்தது. இதில் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. சென்னிமலை கொங்கு வேளாளர் அறக்கட்டளை செயலாளர் கொங்கு கந்தசாமி தலைமை வகித்தார்.காங்கேயம் முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., விடியல் சேகர், ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன், சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு பரிசளித்து பாராட்டினர். சென்னிமலை கொங்கு வேளாளர் அறக்கட்டளை தலைவர் துரைசாமி, பொருளாளர் ஈஸ்வரமூர்த்தி முன்னிலை வகித்தனர். விடியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் வரவேற்றார்.சென்னிமலை யூனியன் முன்னாள் சேர்மன் கோபாலகிருஷ்ணன், டவுன் பஞ்., முன்னாள் தலைவர் சண்முகசுந்தரம், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் தங்கவேல், நகர செயலாளர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.சென்னிமலை சுற்றுவட்டார பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர், 302 பேர் தங்களின் அறிவியல் படைப்புகளை மக்களின் பார்வைக்கு வைத்தனர். இவற்றை ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்