விளையாட்டு போட்டிகளில் அசத்திய ஆசிரியர்கள்
கோவை: கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரியில், பள்ளி மற்றும் கல்லுாரி ஆசிரியர்களுக்கான விஜயலட்சுமி பழனிசாமி நினைவு சுழற்கோப்பை விளையாட்டு போட்டி நடந்தது. கல்லுாரியின் நிறுவனர் பொங்கலுார் பழனிசாமி போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.கேரம், பேட்மின்டன், பாஸ்கட்பால், செஸ், கிரிக்கெட், டேபிள் டென்னிஸ், த்ரோபால், வாலிபால் ஆகிய போட்டிகள் நடந்தன. 50 பள்ளி மற்றும் கல்லுாரிகளிலிருந்து, ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விளையாட்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு கோப்பைகளும், பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. கல்லுாரியின் துணைத் தலைவர் இந்து, முதன்மை செயல் அதிகாரி மோகன்தாஸ் காந்தி, முதல்வர் ராமசாமி, துணை முதல்வர் மைதிலி ஆகியோர் கலந்துகொண்டனர்.