உள்ளூர் செய்திகள்

சிஷ்யா கல்லுாரி பட்டமளிப்பு விழா

திருக்கோவில்லூர்: சு.வாளைவெட்டி, சிஷ்யா கலை அறிவியல் கல்லூரியின் 2ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில், திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.திருவண்ணாமலை மாவட்டம், சு.வாளைவெட்டி, சிஷ்யா கலை அறிவியல் கல்லூரியின் 2ம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.கல்லூரி முதல்வர் நாராயணசாமி தலைமை உரையாற்றினார்.அருணாச்சலேஸ்வரர் கல்வி அறக்கட்டளை தாளாளர் டாக்டர் கணேசன், செயலாளர் நேரு, பொருளாளர் மணி, துணைத் தலைவர் சாந்தகுமார், இணை செயலாளர் கண்ணன், கல்லூரி இயக்குனர் மகாதேவன் முன்னிலை வகித்தனர்.திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பாபுஜனார்த்தனம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 272 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டி பேசினார்.நிகழ்ச்சியில் அறக்கட்டளை உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்