மகளிர் கல்லுாரியில் உளவியல் ஆலோசனை
விழுப்புரம்: விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் 'செரன்ஸ் 26 - மாணவர்களுக்கான முழுமையான மேம்பாட்டு திட்டம்' தலைப்பில் ஆலோசனை நிகழ்ச்சி நடந்தது.உளவியல் முதுகலை துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, உதவி பேராசிரியை தேவிஸ்ரீ தலைமை தாங்கி, மாணவர்களின் உணர்ச்சி நுண்ணறிவு, படைப்பாற்றல், சுய விழிப்புணர்வு, தொழில் தயார் நிலையை மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிப்பது குறித்து கூறினார்.உளவியல் துறை தலைவர் பரணி, முழுமையான மேம்பாடு குறித்தும், சமநிலையான வாழ்க்கை முறை மற்றும் சுயவளர்ச்சி யுக்திகளின் முக்கியத்துவம் பற்றி கூறினார். தொடர்ந்து, மாணவர்களை அனுபவ கற்றலில் ஈடுபடுத்துவதற்கான அமர்வு நடந்தது.உதவி பேராசிரியை இலக்கியா நன்றி கூறினார்.