உள்ளூர் செய்திகள்

விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

சேலம்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளில் சேர, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்து, சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் கண்மணி (பொ) அறிக்கை:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதிகளில், 2026 - 27ம் கல்வி ஆண்டில் சேர, 17 முதல், 25 வயதுக்குட்பட்ட, பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, கல்லூரியில் சேரும் மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம். தேசிய, மாநில போட்டிகளில் பதக்கங்கள் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.தகுதியானவர்கள் வரும், 26க்குள் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கான தேர்வு போட்டி, வரும், 30ல் சென்னையில் நடக்க உள்ளது.தடகளம், ஜூடோ, கால்பந்து, கையுந்து பந்து, வாள் விளையாட்டு, பளுதூக்குதல், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, கைப்பந்து ஆகிய போட்டிகள், ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு மைதானத்திலும், ஹாக்கி, கபடி போட்டிகள், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு மைதானத்திலும் நடக்க உள்ளது.சிறப்பு நிலை விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சி, சத்தான உணவு வழங்கப்படும். விபரங்களுக்கு சேலம் காந்தி மைதானத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரில் அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்