உள்ளூர் செய்திகள்

அரசு கல்லுாரி ஆண்டு விழா

பென்னாகரம்: ஏரியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நேற்று நடந்தது.பென்னாகரம் வட்டம், ஏரியூர் பகுதியிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நான்காவது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. வணிகவியல் துறை நடராஜன் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு, தலைமை தாங்கிய முதல்வர் நாகராஜன், 2025 - 26ம் ஆண்டுக்கான அறிக்கையை வாசித்தார். விளையாட்டு துறைக்கான அறிக்கையை வாசித்தார்.தர்மபுரி அரசு கலைக் கல்லூரி இயக்குனர் பாலமுருகன், மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு துறை குறித்த நெறிமுறைகளை தெளிவாக எடுத்துரைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், அரசு மகளிர் கலை கல்லூரி முதல்வர் கீதா மாணவர்களின் மன நலம் குறித்து பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினர்கள் இருவரும் பல்கலைக்கழக தேர்வில் மற்றும் விளையாட்டில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு, சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பையை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்