பள்ளி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு கவுரவம்
காரமடை: காரமடை எஸ்.வி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 108 மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.தனியார் மருத்துவமனை தலைமை மருத்துவர் சவுமியா வதனா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பெற்றோருக்கு, குழந்தை பராமரிப்பு, வளர்ப்பு முறை போன்ற பல்வேறு அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல் வழங்கி பேசுகையில், "ஆரோக்கியமான உணவு முறைகளை பெற்றோர் பின்பற்றினால் தான் குழந்தைகளும் பின்பற்றுவர்.பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகங்களில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் தென்படுகிறது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஸ்டீல் வாட்டர் பாட்டில்கள் உபயோகிக்க வேண்டும்," என்றார்.பள்ளி தாளாளர் பழனிசாமி, முதல்வர் சசிகலா, அறங்காவலர் தாரகேஷ்வரி மற்றும் நிர்வாக அதிகாரி சிவசதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.